செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

ரிஷபம் - தை மாத ராசி பலன்கள் 2020

(கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) - கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  சுக ஸ்தானத்தில் சந்திரன்  -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்  -  அஷ்டம ஸ்தானத்தில்  குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன் -  தொழில்  ஸ்தானத்தில்  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு  செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
புகழுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் ரிஷபராசியினரே, இந்த மாதம் மனதில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். லாபம்  கிடைக்கும். உங்கள் தீவிர முயற்சியால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களின்  கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்படும். எனவே பேசும் போது கவனமுடன் இருக்கவும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத்தில் சிலர் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளிடம்  அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. உடல்  சூட்டை சீராக வைத்துக்கொள்வதால் பெரிய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். 
 
கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சில சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்  பெறுவீர்கள். சக நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
 
அரசியல்துறையினர் கடுமையாக உழைத்து சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட  வேண்டாம். யாருக்கும் ஜாமின் கொடுக்க வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். 
 
பெண்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை  நிர்ணயிக்கும் திறமை அதிகரிக்கும்.  அடுத்தவர் பிரச்சனை தீர்க்க உதவி செய்வதை  தவிர்ப்பது  நல்லது. 
 
மாணவர்களுக்கு  மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது நல்லது. அடுத்தவரை  நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன்  மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே  தங்க நேரிடலாம்.  வீண்செலவுகள்  ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.  குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். 
  
ரோகிணி:
 
இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது. எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல  முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம்  காட்டுவீர்கள்.
 
மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
 
இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். காரியங்களில்  தடை தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிலும் கவனம் தேவை. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு  நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். 
 
பரிகாரம்:  வெள்ளி தோறும் அம்மனை வழிபட்டு வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 22, 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 16, 17; பிப்ரவரி 12.